விபூதி மகிமை - 3

திருச்சிற்றம்பலம்
𑌶𑍍𑌰𑍀 𑌜𑍍𑌞𑌾𑌨𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧 𑌗𑍁𑌰𑍁𑌭𑍍𑌯𑍋 𑌨𑌮𑌃
வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை
தேவி பாகவதம் — ஏகாதச ஸ்கந்தம் — விபூதி தாரண மஹாத்ம்ய வர்ணனம்
“ஶ்ருதயஃ ஸ்ம்ருதயஃ ஸர்வாஃ புராணாந்யகிலாந்யபி”
— தேவி பாகவதம், ஏகாதச ஸ்கந்தம், 14ஆம் அத்தியாயம்
வேதோக்த புராணப் பிரமாண பஸ்ம மகிமை
விபூதி, பஸ்மஸ்நானம், திரிபுண்ட்ரம் — தேவி பாகவதப் பிரமாணம்

முன்னுரை

ஸ்ரீமத் தேவி பாகவத மஹாபுராணத்தின் ஏகாதச ஸ்கந்தத்தில் உள்ள பதினான்காம் அத்தியாயத்தில், நாராயணர் நாரத முனிவருக்குச் சொல்லும் முறையில் விபூதி தாரண மஹாத்ம்ய வர்ணனம் கூறப்படுகிறது. அதிலிருந்து விபூதி, பஸ்மஸ்நானம், திரிபுண்ட்ர தாரணம் ஆகியவற்றின் பெருமையை வெளிப்படுத்தும் சில முக்கிய ஸ்லோகங்களை இங்கு காண்போம்.

இவ்வகை புராணப் பிரமாணங்கள், விபூதி என்பது வெறும் வழக்கமோ அலங்காரமோ அல்ல; வேதம், ஸ்மிருதி, புராணம் ஆகியவற்றால் புகழப்பட்ட சைவ சாஸ்திர நியமம் என்பதைத் தெளிவாக்குகின்றன. உண்மையான சைவ சின்னமான திருநீற்றை இகழ்ந்து, மஞ்சள் சூர்ணம், பஞ்சராத்திரப் புண்டரம், கற்பித மதச்சின்னங்கள் போன்றவற்றை உயர்த்திப் பேசும் அவைதிக வாதம், இந்தப் புராண வாக்கியங்களின் முன் முற்றாக உடைந்து போகிறது.

1. தேவி பாகவதம் — ஏகாதச ஸ்கந்தம் — 14ஆம் அத்தியாயம் பஸ்ம திக்த சரீரனுக்குத் தானம் அளிப்பதின் பலன்
ஶ்ரீநாராயண உவாச ।
பஸ்மதிக்தஶரீராய யோ ததாதி தனம் முதா ।
தஸ்ய ஸர்வாணி பாபாநி விநஶ்யந்தி ந ஸம்ஶயஃ ॥ ௧ ॥
தேவி பாகவதம், 11.14.1
பொருள் :

ஸ்ரீநாராயணன் கூறினார்: விபூதியால் உடல் பூசப்பட்டவருக்கு மகிழ்ச்சியுடன் யார் தானம் அளிக்கிறார்களோ, அவருடைய எல்லாப் பாவங்களும் நிச்சயமாக அழிந்து போகும்; இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

2. வேதம், ஸ்மிருதி, புராணம் அனைத்தும் விபூதி மஹிமையைச் சொல்கின்றன தேவி பாகவதம், 11.14.2
ஶ்ருதயஃ ஸ்ம்ருதயஃ ஸர்வாஃ புராணாந்யகிலாந்யபி ।
வதந்தி பூதிமாஹாத்ம்யம் தத்தஸ்மாத் தாரயேத் த்விஜஃ ॥ ௨ ॥
ஸ்லோகம் 2
பொருள் :

எல்லா ஶ்ருதிகளும், ஸ்மிருதிகளும், எல்லாப் புராணங்களும் விபூதியின் மஹிமையைச் சொல்கின்றன. ஆகையால் த்விஜன் விபூதியைத் தரிக்க வேண்டும்.

இவ்வளவு வெளிப்படையாக “ஶ்ருதி, ஸ்மிருதி, புராணம் அனைத்தும் விபூதி மஹிமையைச் சொல்கின்றன” என்று தேவி பாகவதமே கூறும்போது, விபூதியைத் தாழ்த்திப் பேசும் பஞ்சராத்திர, மாயாவாத, அவைதிக வாதங்கள் சாஸ்திரத்தின் முன் நின்று கொள்ள முடியாத குருட்டு வாதங்களே.

3. மூன்று சந்திகளிலும் திரிபுண்ட்ரம் தரித்தலின் பலன் தேவி பாகவதம், 11.14.3
ஸிதேன பஸ்மனா குர்யாத் த்ரிஸந்த்யம் யஸ்த்ரிபுண்ட்ரகம் ।
ஸர்வபாபவிநிர்முக்தஃ ஶிவலோகே மஹீயதே ॥ ௩ ॥
ஸ்லோகம் 3
பொருள் :

வெண்மையான விபூதியால் தினம் மூன்று சந்திகளிலும் திரிபுண்ட்ரம் இடுபவன், எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தில் மகிமை பெறுவான்.

4. யோகிக்குப் பஸ்மஸ்நானத்தின் பலன் தேவி பாகவதம், 11.14.4
யோகீ ஸர்வாங்ககம் ஸ்நானமாபாததலமஸ்தகம் ।
த்ரிஸந்த்யமாசரேந்நித்யமாஶு யோகமவாப்நுயாத் ॥ ௪ ॥
ஸ்லோகம் 4
பொருள் :

யோகி பாதத்திலிருந்து தலைவரை உடலின் எல்லா அங்கங்களிலும் பஸ்மஸ்நானத்தை தினமும் மூன்று சந்திகளிலும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அவன் விரைவாக யோகசித்தியை அடைவான்.

5. பஸ்மஸ்நானம் ஜலஸ்நானத்தை விட எண்ணிலடங்கா மேன்மை உடையது தேவி பாகவதம், 11.14.5
பஸ்மஸ்நாநேன புருஷஃ குலஸ்யோத்தாரகோ பவேத் ।
பஸ்மஸ்நாநம் ஜலஸ்நாநாதஸங்க்யேயகுணாந்விதம் ॥ ௫ ॥
ஸ்லோகம் 5
பொருள் :

பஸ்மஸ்நானம் செய்தால் மனிதன் தன் குலத்தையே உயர்த்துபவனாவான். பஸ்மஸ்நானம், ஜலஸ்நானத்தை விட எண்ணிக்கையற்ற பலமடங்கு பெருமை உடையதாகும்.

6. பஸ்மஸ்நானம் உள்ளும் புறமும் உள்ள மலத்தைப் போக்கும் தேவி பாகவதம், 11.14.41–44
க்ருத்வா ஶௌசாதிகம் கர்ம ஸ்நாத்வா து விமலே ஜலே ।
பஸ்மனோத்தூளனம் கார்யமாபாததலமஸ்தகம் ॥ ௪௧ ॥

கேவலம் வாருணம் ஸ்நானம் தேஹே பாஹ்யமலாபஹம் ।
விபூதிஸ்நானமநக பாஹ்யாந்தரமலாபஹம் ॥ ௪௨ ॥

த்யக்த்வாபி வாருணம் ஸ்நானம் தத்பரஃ ஸ்யாந்ந ஸம்ஶயஃ ।
க்ருதமப்யக்ருதம் ஸத்யம் பஸ்மஸ்நானம் வினா முனே ॥ ௪௩ ॥

பஸ்மஸ்நானம் ஶ்ருதிப்ரோக்தமாக்நேயம் ஸ்நானமுச்யதே ।
அந்தர்பஹிஶ்ச ஸம்ஶுத்தம் ஶிவபூஜாபலம் லபேத் ॥ ௪௪ ॥
ஸ்லோகங்கள் 41–44
பொருள் :

ஶௌச முதலிய கர்மங்களைச் செய்து, தூய நீரில் ஸ்நானம் செய்த பின், பாதம் முதல் தலை வரை பஸ்மத்தால் உத்தூளனம் செய்ய வேண்டும். நீரால் செய்யப்படும் ஸ்நானம் உடலின் வெளி அழுக்கை மட்டும் போக்கும்; விபூதி ஸ்நானம் வெளிப்புற மலத்தையும் அகமலத்தையும் போக்கும்.

நீர் ஸ்நானத்தை விட்டாலும் விபூதி ஸ்நானத்தில் பற்றுடன் இருக்க வேண்டும். பஸ்மஸ்நானம் இல்லாத கர்மம் செய்யப்பட்டதாக இருந்தாலும் உண்மையில் செய்யப்படாததுபோல ஆகும். பஸ்மஸ்நானம் ஶ்ருதி கூறிய ஆக்னேய ஸ்நானம் ஆகும்; அது உள்ளும் புறமும் சுத்தமடைந்து சிவபூஜையின் பலனை அளிக்கும்.

7. பஸ்மஸ்நானம் இல்லாமல் வேதகர்மம் செய்தாலும் பலன் கிடையாது தேவி பாகவதம், 11.14.46–50
க்ருத்வாபி கோடிஶோ நித்யம் வாருணம் ஸ்நானமாதராத் ।
ந பவத்யேவ பூதாத்மா பஸ்மஸ்நானம் வினா முனே ॥ ௪௬ ॥

யத்பஸ்மஸ்நானமாஹாத்ம்யம் தத்வேதோ வேத தத்த்வதஃ ।
யத்வா வேத மஹாதேவஃ ஸர்வதேவஶிகாமணிஃ ॥ ௪௭ ॥

பஸ்மஸ்நானமக்ருத்வைவ யஃ குர்யாத்கர்ம வைதிகம் ।
ஸ தத்கர்மகலார்தார்தமபி நாப்னோதி வஸ்துதஃ ॥ ௪௮ ॥

யஃ கரிஷ்யதி யத்நேன பஸ்மஸ்நானம் யதாவிதி ।
ஸ ஏவைகஃ ஸர்வகர்மஸ்வதிகாரீ ஶ்ருதிஶ்ருதஃ ॥ ௪௯ ॥

பாவனம் பாவனானாம் ச பஸ்மஸ்நானம் ஶ்ருதிஶ்ருதம் ।
ந கரிஷ்யதி யோ மோஹாத்ஸ மஹாபாதகீ பவேத் ॥ ௫௦ ॥
ஸ்லோகங்கள் 46–50
பொருள் :

கோடிக்கணக்கான முறை மரியாதையுடன் நீர்ஸ்நானம் செய்தாலும், பஸ்மஸ்நானம் இல்லாமல் ஒருவன் புனித ஆத்மாவாக மாட்டான். பஸ்மஸ்நானத்தின் மஹிமையை வேதமே தத்துவமாக அறிகிறது; அல்லது எல்லா தேவர்களுக்கும் சிகாமணியான மஹாதேவன் அறிகிறார்.

பஸ்மஸ்நானம் செய்யாமலே யார் வேதகர்மம் செய்கிறாரோ, அவர் அந்த கர்மத்தின் ஒரு சிறிய பகுதியின் பலன்கூட உண்மையில் பெற மாட்டார். முறையாக முயற்சியுடன் பஸ்மஸ்நானம் செய்பவனே அனைத்து கர்மங்களுக்கும் அதிகாரி என்று ஶ்ருதி அறைகிறது. புனிதங்களில் புனிதமானது பஸ்மஸ்நானம்; மோகத்தால் அதனைச் செய்யாதவன் மஹாபாதகி ஆகிறான்.

இவ்வளவு வெளிப்படையாக தேவி பாகவதம் கர்ஜிக்கும் போது, விபூதியை இகழ்ந்து, சைவ சின்னத்தைத் தள்ளி வைத்து, வேறு மதச் சின்னங்களை வைதிகச் சின்னமாகத் திணிக்க முயல்வோர் வேதநெறியின் பக்கம் நிற்பவர்கள் அல்லர். அவர்கள் சைவ சாஸ்திரத்திற்கு எதிராக நிற்கும் அவைதிக வாதிகள்.

8. பஸ்மஸ்நானம், ருத்ரஸ்மரணம், பாபநாசம் தேவி பாகவதம், 11.14.34–35
ஸ்மரணாதேவ ருத்ரஸ்ய யதா பாபம் ப்ரணஶ்யதி ।
அப்யகார்யஸஹஸ்ராணி க்ருத்வா யஃ ஸ்நாதி பஸ்மநா ॥ ௩௪ ॥

தத்ஸர்வம் தஹதே பஸ்ம யதாக்நிஸ்தேஜஸா வனம் ॥ ௩௫ ॥
ஸ்லோகங்கள் 34–35
பொருள் :

ருத்ரனை நினைத்தாலே பாபம் அழிகிறதுபோல, ஒருவன் ஆயிரக்கணக்கான தவறான செயல்களைச் செய்திருந்தாலும், விபூதியால் ஸ்நானம் செய்தால், தீ தன் தேஜஸால் காட்டை எரிப்பதுபோல, அந்தப் பாவங்களையெல்லாம் பஸ்மம் எரித்தழித்து விடும்.

9. திரிபுண்ட்ரம் பிரம்மா, விஷ்ணு, சிவாத்மகம் தேவி பாகவதம், 11.14.39–40
ஆயுஷ்காமோऽதவா வித்வான் பூதிகாமோऽதவா நரஃ ।
நித்யம் வை தாரயேத் பஸ்ம மோக்ஷகாமீ ச வை த்விஜஃ ॥ ௩௯ ॥

திரிபுண்ட்ரம் பரமம் புண்யம் ப்ரஹ்மவிஷ்ணுஶிவாத்மகம் ।
யே கோரா ராக்ஷஸாஃ ப்ரேதா யே சாந்யே க்ஷுத்ரஜந்தவஃ ॥ ௪௦ ॥
ஸ்லோகங்கள் 39–40
பொருள் :

ஆயுள் விரும்புகிறவனோ, ஞானி ஆனவனோ, ஐஶ்வர்யம் விரும்புகிறவனோ, மோக்ஷம் விரும்புகிற த்விஜனோ — அனைவரும் தினமும் பஸ்மத்தைத் தரிக்க வேண்டும். திரிபுண்ட்ரம் பரம புண்ணியமானது; அது பிரம்மா, விஷ்ணு, சிவாத்மகமாக உள்ளது.

“பராவணமாவது நீறு பாவமறுப்பது நீறு” என்னும் திருநீற்றுப் பதிகத்தையும் காண்க. வேதம், ஆகமம், புராணம், திருமுறை என எல்லா சைவப் பிரமாணங்களும் விபூதி மஹிமையைத் தெளிவாக நிலைநிறுத்துகின்றன. விபூதி பாவமறுக்கும் என்று சம்பந்தர் பாட, பஸ்மம் பாபங்களை எரிக்கும் என்று தேவி பாகவதம் கூறுகிறது.

10. பஸ்மஜாபாலோபநிஷத் சான்று பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் ஆகியோருக்கும் அதீதமான பகவான் சிவன்
ஹிரண்யபாஹும் ஹிரண்யரூபம் ஹிரண்யவர்ணம் ஹிரண்யநிதிமத்வைதம் சதுர்தம் ।
ப்ரஹ்மவிஷ்ணுருத்ராதீதம் ஏகமாஶாஸ்யம் பகவந்தம் ஶிவம் ப்ரணம்ய ॥
பஸ்மஜாபாலோபநிஷத் — அத்தியாயம் 1
பொருள் :

பொன்னொளி போன்ற புஜங்களை உடையவரும், பொன்னுருவாக விளங்குபவரும், பொன்னிறத் தெய்வீகப் பிரகாசம் உடையவரும், பொன்னெனும் மெய்யான ஆதாரச் செல்வமாக இருப்பவரும், அத்வைதமான நான்காம் பரநிலையாக இருப்பவருமான பகவான் சிவனை வணங்க வேண்டும்.

அவர் பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் ஆகிய மூவருக்கும் அதீதமானவர்; ஒரே ஒருவராக அறியப்பட வேண்டிய பரமபகவான் சிவன். ஆகவே அவரைப் பணிந்து, பஸ்ம மஹிமை கூறப்படுகிறது.

இவ்வுபநிஷத் தொடக்கமே பரசிவனை பிரம்மா, விஷ்ணு, ருத்ரருக்கும் அதீதமான ஒரே பரம்பொருளாக நிலைநாட்டுகிறது. ஆகவே சிவனை ஜீவன் என்றும், விஷ்ணுவுக்குக் கீழானவன் என்றும் பேசும் பஞ்சராத்திர, மாயாவாத, அவைதிக வாதங்கள் உபநிஷத் வாக்கியத்திற்கே நேரான விரோதம்.

முடிவுரை

சர்வ வித்யைகளுக்கும் காரணனாகிய பரசிவமூர்த்தி அருளிய வேதம், சிவாகமம், புராணம், உபநிஷத், திருமுறை முதலிய பிரமாணங்களில் விபூதியின் பெருமை எண்ணிறந்ததாக உள்ளது. குறிப்பாக நாராயணரே நாரத மாமுனிக்குப் விபூதியின் மஹிமையை எடுத்துரைத்திருப்பது, விபூதி மஹிமை சைவப் பிரமாணத்தில் எவ்வளவு உறுதியானது என்பதை வெளிப்படுத்துகிறது. ஊர்த்துவ புண்டரத்திற்கு இவ்வளவு மகிமைைகள் எங்கும் படிக்கப்படவில்லை. 

விபூதிக்கு இவ்வளவு தெளிவான பிரமாணங்கள் இருக்கும்போது, மஞ்சள் பொடி, சூர்ணம் என்று கண்டதையும் பூசி சுருதி வாய்மையாம் விபூதியை இகழ்ந்து, பரசிவ நிந்தை செய்யும் அவைதிக வாதம் முற்றாக நிரஸ்தமாகிறது. விபூதி நிந்தை என்பது எரிவாய் நரகையே சம்பவிக்கும். 

பஸ்மஸ்நானம் செய்யாதவன் வேதகர்ம பலன்கூட அடைய மாட்டான் என்றும், பஸ்மஸ்நானத்தை மோகத்தால் செய்யாதவன் மஹாபாதகி என்றும் தேவி பாகவதம் கூறிய பின், விபூதியைத் தாழ்த்திப் பேசுபவர்கள் சாஸ்திரவாதிகள் அல்லர். அவர்கள் சைவ சாஸ்திரத்தின் எதிர் நின்று குருட்டு வாதம் செய்பவர்கள்.

மூல நூல் சரிபார்ப்பு இணைப்புகள்

Comments