முன்னுரை
பரம்பொருளாகிய சிவபெருமானை மும்மூர்த்திகளையும் கடந்த நான்காவது சதுர்த்த உருத்திரராக உபநிடதங்கள் உத்கோஷிக்கின்றன. மூவரையும் கடந்த ஒன்றை தான் அக்ஷரம், துரியம், சிவம் என்னும் நாமங்களால் கூறுகின்றன உபநிடதங்கள். ஆனால் பஞ்சராத்திரிகள் சுபாலம், நாராயணம் முதலான உபநிடதங்களை மட்டும் வைத்து நாராயணன் உருத்திரன் மற்றும் பிரமனைப் படைத்ததாக கற்ப பேதங் காரணமாக நடந்ததை கூறி அதர்வசிகை, அதர்விசிரஸ் முதலிய பிற உண்மை உபநிடதங்களை இதன் மூலம் பொருள் கொள்ள முயற்சிப்பது விபரீதமாம். இதனை மறுக்க முதலில் சிவமகாபுராண வசனங்களை படித்து உண்மை நிறுவுவாம்.
1. சிவமகாபுராணம் — வித்யேஶ்வர சம்ஹிதை — சாத்யசாதனகண்டம்
யஸ்மாத் ஸர்வமிதம் ப்ரஹ்மவிஷ்ணுருத்ரேந்த்ரபூர்வகம் ॥ 10–11 ॥
ஸஹபூதேந்த்ரியைஃ ஸர்வைஃ ப்ரதமம் ஸம்ப்ரஸூயதே ।
ஏஷ தேவோ மஹாதேவஃ ஸர்வஜ்ஞோ ஜகதீஶ்வரஃ ॥ 11–12 ॥
எந்த பரம்பொருளை மனத்தாலும் அடைய முடியாமல், வாக்குகள் திரும்புகின்றனவோ; எந்த பரம்பொருளிடமிருந்து பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், இந்திரர் முதலாகிய இந்த முழு உலகமும், பூதங்களுடனும், இந்திரியங்களுடனும் கூடிய அனைத்தும் முதலில் உற்பத்தியாகின்றனவோ; அந்த தேவனே மகாதேவன்; அவனே எல்லாம் அறிந்தவன்; அவனே ஜகதீஶ்வரன்.
குறிப்பு : அதர்வசிகோபநிடதமும் பிரம விஷ்ணு ருத்ரேந்திரர்கள் பஞ்சபூதங்களோடு பரமசிவனால் படைக்கப்படுகிறார்கள் என்பதை இந்த புராண வசனம் உத்கோஷிப்பதை காண்க.
ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹ பூதைஃ ॥
2. சிவமகாபுராணம் — வித்யேஶ்வர சம்ஹிதை
சூழல் : பிரம்மாவின் பொய் மற்றும் அகம்பாவத்தைக் கண்ட சிவன், பைரவனை உண்டாக்குகிறார். அப்போது விஷ்ணு சிவனை நாடி, பிரம்மாவுக்கு முன்பு கிடைத்த ஐந்தாம் முகமே “ஈஶ சின்னம்” என்று கூறி, பிரம்மாவை மன்னிக்க வேண்டுகிறான். இதன் மூலம் பிரம்மாவின் மேன்மையெனத் தோன்றிய முகமும் சிவனால் தரப்பட்ட ஈஶசின்னம் என்று சொல்லப்படுகிறது.
யதஸ்ய பஞ்சானனமீஶசிஹ்னம் ।
தஸ்மாத் க்ஷமஸ்வாத்யமனுக்ரஹார்ஹம்
குரு ப்ரஸாதம் விதயே ஹ்யமுஷ்மை ॥ 7 ॥
இவனுக்கு முன்பு, உன்னாலேயே முயன்று தரப்பட்ட அந்த ஐந்தாம் முகம் ஈஶ சின்னமாக இருந்தது. ஆகையால், இப்போது இவன் அருளுக்குரியவன் என்று எண்ணி மன்னித்தருளுங்கள்; இந்த விதியான பிரம்மாவுக்கு நீர் அருள் செய்யுங்கள்.
3. பிரமன் துதி — சிவபிரான் விஶ்வயோனி
ஸஹிஷ்ணவே ஸர்வதோஷாணாம் ஶம்பவே ஶைலதன்வனே ॥ 11 ॥
பகவானே! உமக்கு நமஸ்காரம். உறவனாகவும், உலகத்தின் யோனியாக — அனைத்திற்கும் மூல உற்பத்தி-காரணமாகவும் இருப்பவரே! எல்லா தோஷங்களையும் பொறுப்பவரே! ஶம்புவே! மலை-வில்லைக் கொண்டவரே! உமக்கு நமஸ்காரம்.
குறிப்பு : விஸ்வம் நாராயணம் என்று மகாநாராயணம் கூறியது. சிவபிரான் விஸ்வயோனி என்றழைக்கப்படுகிறார். இதிலிருந்தே இவ்விருவரின் தாரதம்மியத்தை அறியலாம்.
4. சிவமகாபுராணம் — ருத்ர சம்ஹிதை — ஸ்ருஷ்டி கண்டம்
மஹேஶஸ்தத்ர பூர்ணாஂஶஃ ஸ்வயமேவ ஶிவோऽபரஃ ॥ 17 ॥
பிரம்மா, விஷ்ணு, மகேஶர் — இந்த மூன்று தேவர்களும் சிவனுடைய அங்கங்களில் இருந்து பிறந்தவர்கள். அவர்களில் மகேஶர் பூர்ண அம்சம் உடையவர்; அவர் வேறு யாருமல்ல, சிவனே மற்றொரு ரூபமாக இருக்கிறார்.
5. சிவனுடைய மாயையின் கடத்த முடியாத தன்மை
தத்கதிம் ந ஹி பஶ்யந்தி விஷ்ணுப்ரஹ்மாதயோऽபி ஹி ॥ 28 ॥
முனிச் சிறந்தோர்களே! ஶாம்பவீ மஹாமாயை நிச்சயமாக வியத்தற்குரியது, வியத்தற்குரியது. அதன் நடத்தை/நிலையை விஷ்ணு, பிரம்மா முதலியவர்களுக்குக் கூட காண முடியாது.
6. பிரம்மாவும் விஷ்ணுவும் பரமாத்மாவான சிவனிடமிருந்து தோன்றுதல்
காத்ராப்யாம் ஸவ்யஸவ்யாப்யாம் மம ஸர்வேஶ்வரஸ்ய ஹி ॥ 16 ॥
அயம் மே தக்ஷிணாத்பார்ஶ்வாத்ப்ரஹ்மா லோகபிதாமஹஃ ।
வாமபார்ஶ்வாச்ச விஷ்ணுஸ்த்வம் ஸமுத்பன்னஃ பராத்மனஃ ॥ 17 ॥
மஹாபலர்களான நீங்கள் இருவரும் என் பிரகிருதியிலிருந்து உற்பத்தியாகினீர்கள்; எல்லோருக்கும் ஈஶ்வரனான எனது வலது மற்றும் இடது அங்கங்களில் இருந்து உற்பத்தியாகினீர்கள். இவன், என் வலது பக்கத்திலிருந்து உற்பத்தியாகிய பிரம்மா — உலகப் பிதாமஹன். நீயோ, பரமாத்மாவான என்னுடைய இடது பக்கத்திலிருந்து உற்பத்தியாகிய விஷ்ணு.
7. உருத்திரன் பிரமனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது சிவாக்ஞையால்
ப்ரகடீபவிதா லோகே நாம்னா ருத்ரஃ ப்ரகீர்திதஃ ॥ 30 ॥
மதம்ஶாத்தஸ்ய ஸாமர்த்யம் ந்யூனம் நைவ பவிஷ்யதி ।
யோऽஹம் ஸோऽஹம் ந பேதோऽஸ்தி பூஜாவிதிவிதானதஃ ॥ 31 ॥
பிரம்மனே! உன்னுடைய அங்கத்திலிருந்து என்னுடைய இந்த பரம்பிரம்ம ரூபம் உலகில் வெளிப்படும்; அது “ருத்ரன்” என்ற பெயரால் புகழப்படும். அவன் என்னுடைய அம்சமாக இருப்பதால், அவனுடைய சக்தி குறைவதில்லை. நான் யார், அவனும் அதுவே; பூஜை விதி-விதானத்தின் அடிப்படையில் அவனுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லை.
குறிப்பு : இதிலிருந்து உருத்திரன் பிரமனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது சிவாக்ஞையால் என்பது உறுதியானது. பஞ்சராத்திரிகளின் "நான்முகனும் தான்முகமாய் சங்கரனைப் படைத்தான்" என்னும் பூச்சாண்டி வேலை எடுபடாது.
8. சிவமகாபுராணம் — வாயவீய சம்ஹிதை — பூர்வபாகம்
தபஸா தோஷயித்வா ஸ்வம் பிதரம் பரமேஶ்வரம் ॥ 16 ॥
லப்த்வா ஸர்வாத்மநாம் தஸ்ய ப்ரஸாதாத்பரமேஷ்டினஃ ॥
ப்ரஹ்மநாராயணௌ பூர்வம் ருத்ரஃ கல்பாந்தரேऽஸ்ருஜத் ॥ 17 ॥
கல்பாந்தரே புனர்ப்ரஹ்மா ருத்ரவிஷ்ணூ ஜகன்மயஃ ॥
விஷ்ணுஶ்ச பகவான்ருத்ரம் ப்ரஹ்மாணமஸ்ருஜத்புனஃ ॥ 18 ॥
நாராயணம் புனர்ப்ரஹ்மா ப்ரஹ்மாணமஸ்ருஜத்புனஃ ॥
ஏவம் கல்பேஷு கல்பேஷு ப்ரஹ்மவிஷ்ணுமஹேஶ்வராஃ ॥ 19 ॥
பரஸ்பரேண ஜாயந்தே பரஸ்பரஹிதைஷிணஃ ॥
தத்தத்கல்பாந்தவ்ருத்தாந்தமதிக்ருத்ய மஹர்ஷிபிஃ ॥ 20 ॥
அவ்வாறிருந்தாலும், பரஸ்பர மாட்சர்யத்தால், ஒருவரை ஒருவர் விட மேலானவராகத் தோன்ற விரும்பி, தங்கள் தந்தையான பரமேஶ்வரனைத் தவத்தால் திருப்திப்படுத்தினர். அந்த பரமேஷ்டியான பரமேஶ்வரனுடைய அருளால், முழுமையாக சக்தியைப் பெற்று, முன்பு ஒரு கல்பாந்தரத்தில் ருத்ரன் பிரம்மாவையும் நாராயணனையும் படைத்தான். மற்றொரு கல்பாந்தரத்தில் ஜகன்மயனான பிரம்மா ருத்ரனையும் விஷ்ணுவையும் படைத்தான். பகவான் விஷ்ணுவும் மறுபடியும் ருத்ரனையும் பிரம்மாவையும் படைத்தான். பின்னர் பிரம்மா நாராயணனையும் படைத்தான்; மறுபடியும் பிரம்மாவும் படைக்கப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மா, விஷ்ணு, மஹேஶ்வரர், பரஸ்பர நன்மையை விரும்பி, ஒருவரிடமிருந்து ஒருவர் தோன்றுகின்றனர். அந்தந்த கல்பாந்தர நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மஹரிஷிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஸ்ருஷ்டஶ்ச ப்ரஹ்மணா ஸத்யோ ப்ருவோர்மத்யாதயத்நதஃ ॥ 43 ॥
அந்த நேரத்தில் விஷ்ணு அந்த மஹாத்மாவான பிரம்மனால் விழுங்கப்பட்டான்; உடனே பிரம்மாவால், எந்த முயற்சியும் இன்றி, புருவங்களின் நடுவிலிருந்து மீண்டும் படைக்கப்பட்டான்.
9. திருமுறைப் பிரமாணங்கள்
மூவர் ஆய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே”
தேவரும் காணா சிவபெருமான்”
இப்படி பல திருமுறைப் பிரமாணங்கள் சிவபெருமான் தனது அம்சத்தால் மூவரில் ஒருவனாகிய உருத்திரனாகவும் பூரணத்தால் மூவர்க்கு முதலான பரம்பொருளாகவும் , அந்த அம்ச குண உருத்திரனும் பிரமவிஷ்ணுக்களினும் மேலானவன் என்பதும் வெளிப்பட்டதால் பஞ்சராத்திரிகளின் வாதம் நிரஸ்தாமனது. இதுபோல் பல பிரமாணங்கள் உள்ளன அவைகளை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் காண்க.
10. முடிவு
சுபாலம், நாராயணம் முதலான இடங்களில் கற்பபேதக் கதைகளால் வரும் உருவாக்க வாக்கியங்களை மட்டும் பிடித்து, அதர்வசிகை, அதர்விசிரஸ் முதலிய உபநிடதங்களின் பரம்பொருள் வாக்கியங்களையும், சிவமகாபுராணத்தின் நேரடி பிரமாணங்களையும் வளைத்து விட முயல்வது வாதமல்ல; அது பிரமாண விரோதமான விபரீதம்.
மூவரையும் கடந்த பரமசிவன், தன் அம்சத்தால் உருத்திரரூபமாகவும், பூரணத்தால் மூவர்க்கு முதலாகவும் விளங்குவான் என்று சிவமகாபுராணமும் திருமுறைகளும் ஒரே குரலில் வெளிப்படுத்திய பின், இதற்கு எதிராக பஞ்சராத்திரப் பிடிவாதம் காட்டுவது பிரமாணத்தின் முன் நிற்காத பூச்சாண்டி வேலை மட்டுமே.
மூல நூல் சரிபார்ப்பு இணைப்புகள்
- சிவமகாபுராணம் — வித்யேஶ்வர சம்ஹிதை: GRETIL — Śivapurāṇa Books 1 and 7
- சிவமகாபுராணம் — ருத்ர சம்ஹிதை: siva.sh — Rudra Saṃhitā chapter list
- சிவமகாபுராணம் — வாயவீய சம்ஹிதை — பூர்வபாகம்: GRETIL — Vāyavīya Saṃhitā text
- சிவமகாபுராணம் — வாயவீய சம்ஹிதை மாற்று உரை: TUFS — Vāyavīya Saṃhitā text
- அதர்வசிகோபநிடதம் — சம்ஸ்கிருத உரை: eBharati Sampat — Atharvaśikhopaniṣat text
- அதர்வசிகோபநிடதம் — பொருள் பார்க்க: Hinduwebsite — Atharvaśikhā Upaniṣad reference
- அதர்வசிரஸோபநிடதம் — பொருள் பார்க்க: Hinduwebsite — Atharvaśiras Upaniṣad reference
Comments
Post a Comment