பரம காரணனாகிய சங்கரனே பரம்பொருள் என்றும் அவரே விஷ்ணு முதல் அனைத்து தேவர்களுக்கும் தலைவர் என்பதையும் வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இவைகளை முக்கிய பிரமாணமாகவும் இராமாயணம், பாரதம், சிவரகசியம் முதலியவைகளை உபப்பிரமாணமாகக் கொண்டும் சிவபரத்துவம் ஸ்தாபிக்க எழுந்த வலைதளமே இது.
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ ஞானசம்பந்த குருப்யோ நமஹ!
சிவனொடுக்கும் தெய்வம் தேடினுமில்லை
அவனொடப்பார் இங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே!
- திருமந்நிரம்
பஞ்சராத்திரிகள், வேதாந்திகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகான்மவாதிகள் , ISCON அமைப்பினர் வேதங்களுக்கு தன் இஷ்டம் போல தவறாக பொருள் கூறி பாமரர்களை மயக்குவது இக்காலத்தில் அதிகமாகிவிட்டது. இவர்களின் முயற்சிகளை ஹரதத்த சிவாச்சாரியார், அப்பய்ய தீக்ஷிதர், ஸ்ரீபதி பண்டிதாராத்யர், ரேணுகாச்சார்யார் முதலான சைவ ஆசாரியார்கள் முறியடித்து வேதப் பயன் சிவபிரானே என்று உண்மை நிறுவியுள்ளனர்.
சிவபிரானை ஜீவாத்மா என்று இகழ்ந்தும் அவர் கண்ணை ஓராழ்வார் பங்கப்படுத்தினார் என்றும் கொஞ்சமும் வைதிகம் அல்லாத குருட்டுக் கதைகளைத் தன் கூட்டத்தாருக்குக் கூறி மகாபாவங்களை செய்கின்றனர் இந்த பஞ்சராத்திரிகள். இவர்கள் யோனி புண்டரம் முதலானவைகளை தரித்து அதர்வசிரஸ், பஸ்மஜாபாலம் முதலான உண்மை உபநிடதங்களால் துதிக்கப்பட்ட திருநீற்றை இகழ்ந்து காலம் கழித்து வருகின்றனர். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வேத நெறியையும் அதில் சிறந்த சைவத் துறையயும் நிலைபெறச் செய்வதே பரமசிவ கைங்கர்யமாகும்.
புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வாயிலாகவும், ஸ்மிருதிகளின் வாயிலாகவும் , வேதங்களின் வாயிலாகவும் பரமேசுவரனின் பெருமைகளை அறிந்து கல்பித ஸ்லோகங்களையும், கல்பித உபநிடதங்களையும் அவைதிக நூல்களையும் முழுமையாக நிராகரித்து சிவபரத்துவத்தை மலைவு படாது தெளிவோம்.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
திருச்சிற்றம்பலம்
.jpg)
No comments:
Post a Comment