இராமேஸ்வர பரத்துவம் - 2

திருச்சிற்றம்பலம்
𑌶𑍍𑌰𑍀 𑌜𑍍𑌞𑌾𑌨𑌸𑌮𑍍𑌬𑌨𑍍𑌧 𑌗𑍁𑌰𑍁𑌭𑍍𑌯𑍋 𑌨𑌮𑌃
இராமேஸ்வரம் - இராமனின் ஈஸ்வரனாகிய சிவபிரான் இருந்தருளும் தலம்
இராமேஸ்வர பரத்துவம் - 2
“தசரத தநய ஸ்தாபிராதி தத்வாத்”
— சுலோக பஞ்சகம்

முன்னுரை

முதல் பாகத்தில் உள்ள புராணங்களோடு இந்த புராண வாக்கியங்களையும் பரம பிரமாணமாகக் கொள்க. இராமேசுவரத்தின் பெருமையும் இராமன் சீதையோடு திருநீறணிந்து பூசை புரிந்த ஸ்லோகங்கள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

1. சௌர புராணம்
ஆநயாமாஸ தாம் சீதாம் அஶோகவனமத்யகாம் ।
ப்ரதிஷ்டாப்ய மஹாதேவம் சேதுமத்யேʼத ராகவஃ ॥
லப்தவாந் பரமாம் பக்திம் ஶிவே ஶிவபராக்ரமஃ ।
ராமேஶ்வர இதி க்யாதோ மஹாதேவஃ பிநாகத்ருக் ॥
தஸ்ய தர்ஶனமாத்ரேண ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி ।
— சௌர புராணம், முப்பதாம் அத்தியாயம், ஸ்லோகம் 64–66
பொருள் :

அஶோக வனத்தின் நடுவில் இருந்த சீதையை ராகவன் மீட்டுக் கொண்டு வந்தான். அதன் பின்னர் ராகவன் சேதுவின் நடுவில் மஹாதேவனை பிரதிஷ்டை செய்தான். ஶிவபராக்ரமம் உடைய ராமன், ஶிவபெருமானிடத்தில் உயர்ந்த பக்தியைப் பெற்றான். பிநாகத்தை ஏந்திய மஹாதேவன் “ராமேஶ்வரர்” என்று புகழ்பெற்றார். அந்த ராமேஶ்வரரை தரிசிப்பது மட்டுமாலும் ப்ரஹ்மஹத்தி போன்ற பாபம் நீங்கும்.

2. பத்ம புராணம் — பாதாளகாண்டம்
தத்வாக்யம் ராகவஃ ஶ்ருத்வா பப்ரச்ச முநிபுங்கவாந் ।
ஶ்ரீராம உவாச — விபீஷணஃ கதமஸௌ பத்தஃ ஶ்ருங்களயா ந்ருபைஃ ।
மத்ஸ்தாபிதம் ஶிவம் லிங்கம் த்ருஷ்ட்வா ராமேஶ்வரம் த்வஹோ ।
த்ராவிடைஃ குடிலைர் துஷ்டைராத்மனா தத் விசார்யதாம் ॥
— பத்ம புராணம், பாதாளகாண்டம், அதிகாரம் 104, ஸ்லோகம் 33–36
பொருள் :

அந்த வார்த்தையை கேட்ட ராகவன், முனிகளின் தலைவர்களைக் கேட்டான். ஸ்ரீராமன் கூறினான்: “இந்த விபீஷணன் எவ்வாறு அரசர்களால் சங்கிலியால் கட்டப்பட்டான்? என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமேஶ்வரமான ஶிவலிங்கத்தைப் பார்த்த பிறகும், குடிலமுள்ள துஷ்ட த்ராவிடர்கள் இதனைத் தங்கள் மனத்தால் தவறாகச் சிந்தித்தார்கள். அது உண்மையாக ஆராயப்படட்டும்.”

3. பத்ம புராணம் — ஸ்ருஷ்டி காண்டம்
ஶ்ரீபர்ணா ச நதீ புண்யா வ்யாஸதீர்த்தமனுத்தமம் ।
ததா மத்ஸ்யநதீ காரா ஶிவதாரா ததைவ ச ॥
பவதீர்த்தம் ச விக்யாதம் புண்யதீர்த்தம் ச ஶாஶ்வதம் ।
புண்யம் ராமேஶ்வரம் தத்வத் வேணாபுரமலம்புரம் ॥
— பத்ம புராணம், ஸ்ருஷ்டி காண்டம், அத்தியாயம் 11, ஸ்லோகம் 39–40
பொருள் :

புனிதமான ஶ்ரீபர்ணா நதியும், ஒப்பற்ற வ்யாஸ தீர்த்தமும், அதேபோல் மத்ஸ்யநதியும், காரா தீர்த்தமும், ஶிவதாராவும் உள்ளன. புகழ்பெற்ற பவதீர்த்தமும், நித்தியமான புண்யதீர்த்தமும் உள்ளன. அவற்றைப் போலவே புண்யமான ராமேஶ்வரமும், வேணாபுரமும், அலம்புரமும் புண்யமான தீர்த்தங்களாகக் கூறப்படுகின்றன.

சிவ மஹா புராண சான்று

சிவமஹாபுராணத்தில் கோடிருத்ர ஸம்ஹிதையின் 31 ஆம் அத்தியாயம் 12 ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்றான இராமேஶ்வரத்தின் மாஹாத்ம்யத்தைத் தெளிவாக கூறுகிறது. இராவணனை வெல்ல இராமனுக்கு சிவானுக்கிரகம் சித்தித்தது, இராமன் ஶங்கரனை முறையாகப் பூஜித்தது, பின்னர் ஶிவபெருமான் லிங்க ரூபமாக அங்கே நிலைத்தது ஆகியவை இந்த அத்தியாயத்தில் வெளிப்படையாக வருகின்றன.

4. ஸ்ரீ சிவ மஹா புராணம் — கோடிருத்ர ஸம்ஹிதை, அத்தியாயம் 31, ராமேஶ்வர மாஹாத்ம்ய வர்ணனம்
இத்யுக்த்வா ச ஜலம் முக்தம் ததா ரகுவரேண ச ।
பஶ்சாச்ச பார்திவீம் பூஜாம் சகார ரகுநந்தனஃ ॥
ஆவாஹனாதிகாம்ஶ்சைவ ஹ்யுபசாராந்ப்ரகல்ப்ய வை ।
விதிவத் ஷோடஶம் ப்ரீத்யா தேவமானர்ச ஶங்கரம் ॥
ப்ரணிபாதைஃ ஸ்தவைர்திவ்யைஃ ஶிவம் ஸந்தோஷ்ய யத்நதஃ ।
ப்ரார்த்தயாமாஸ ஸத்பக்த்யா ஸ ராமஃ ஶங்கரம் முதா ॥
— சிவ மஹா புராணம், கோடிருத்ர ஸம்ஹிதை, 4.31.21–23
பொருள் :

இவ்வாறு கூறி, ரகுவரனான ராமனால் நீர் விடப்பட்டது. அதன் பிறகு ரகுநந்தனன் பூமியிலேயே பார்த்திவ பூஜையைச் செய்தான். ஆவாஹனம் முதலான உபசாரங்களை முறையாக ஏற்படுத்தி, பதினாறு உபசாரங்களுடன் மகிழ்ச்சியோடு ஶங்கரனை அர்ச்சித்தான். தெய்வீகமான நமஸ்காரங்களாலும் ஸ்தோத்திரங்களாலும் ஶிவனை முயற்சியுடன் சந்தோஷப்படுத்தி, ராமன் மிக்க பக்தியுடனும் ஆனந்தமனத்துடனும் ஶங்கரனைப் பிரார்த்தித்தான்.

ஶ்ரீராம உவாச ।
த்வயா ஸ்தேயமிஹ ஸ்வாமிந் லோகாநாம் பாவநாய ச ।
பரேஷாமுபகாரார்த்தம் யதி துஷ்டோʼஸி ஶங்கர ॥
ஸூத உவாச ।
இத்யுக்தஸ்து ஶிவஸ்தத்ர லிங்கரூபோʼபவத்ததா ।
ராமேஶ்வரஶ்ச நாம்நா வை ப்ரஸித்தோ ஜகதீதலே ॥
ராமஸ்து தத்ப்ரபாவாத்வை ஸிந்துமுத்தீர்ய சாஞ்ஜஸா ।
ராவணாதீந்நிஹத்யாஶு ராக்ஷஸாந் ப்ராப தாம் ப்ரியாம் ॥
ராமேஶ்வரஸ்ய மஹிமாத்புதோʼபூத்புவி சாத்துலஃ ।
புக்திமுக்திப்ரதஶ்சைவ ஸர்வதா பக்தகாமதஃ ॥
— சிவ மஹா புராணம், கோடிருத்ர ஸம்ஹிதை, 4.31.39–42
பொருள் :

ஸ்ரீராமன் கூறினான்: “ஸ்வாமியே! உலகங்களைப் புனிதப்படுத்துவதற்காகவும், பிறருக்கு உபகாரம் செய்வதற்காகவும், ஓ ஶங்கரா, நீ திருப்தியடைந்திருந்தால் இங்கே தங்கி அருள வேண்டும்.”

சூத முனிவர் கூறினார்: இவ்வாறு வேண்டப்பட்ட ஶிவன் அங்கே லிங்க ரூபமாகத் தோன்றினார். அவர் “ராமேஶ்வரர்” என்ற பெயரால் உலகத்தில் புகழ்பெற்றார். அந்த ராமேஶ்வரரின் பிரபாவத்தால் ராமன் எளிதாக சமுத்திரத்தைத் தாண்டி, ராவணன் முதலான ராட்சஸர்களை விரைவில் கொன்று, தன் பிரியமான சீதையை மீண்டும் பெற்றான். ராமேஶ்வரரின் மகிமை பூமியில் அதிசயமானதும் ஒப்பற்றதுமானதாக ஆனது. அது எப்போதும் பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதோடு, புக்தியும் முக்தியும் அளிப்பதாகும்.

முடிவுரை

முதல் பாகத்தில் கூறிய பிரமாணங்களோடு இங்கு காட்டப்பட்ட சௌர புராணம், பத்ம புராணம், சிவ மஹா புராணம் ஆகிய சான்றுகளும் சேர்ந்து, இராமேஶ்வரத்தில் இராமன் ஶிவபூஜை செய்த உண்மையை இடியென உறுதிப்படுத்துகின்றன.

இராமன் சீதையை மீட்ட பின் சேதுவில் மஹாதேவனை பிரதிஷ்டை செய்தான்; ராமேஶ்வரர் என்ற பெயரால் பிநாகதரியான மஹாதேவன் புகழ்பெற்றார்; ராமன் ஶங்கரனைப் பூஜித்து, ஶிவபிரானின் பிரபாவத்தால் சமுத்திரம் கடந்து ராவணனை வென்றான் என்று சாஸ்திரம் வெளிப்படையாகச் சொல்கிறது.

இதற்குப் பிறகும் இராமேஶ்வரத்தின் ஶைவ உண்மையை மறைக்க முயலும் பஞ்சராத்திர வாதம் சாஸ்திரத்திற்கு எதிரான குருட்டுப் பிடிவாதமே. சாஸ்திரம் தெளிவாகச் சொன்ன இடத்தில் எதிர்வாதிகளின் வஞ்சக விளக்கங்களுக்கு இடமில்லை.

மூல நூல் சரிபார்ப்பு இணைப்புகள்

Courtesy : Please check this video link to know the supremacy of Lord Shiva.
Lord Shiva Lectures - Rama Jayanthi

Comments