முன்னுரை
பத்ம புராணத்தில் இராமன், வீடணன், சுக்ரீவன் முதலானோர் மற்றும் முனிவர்கள் சூழ சிவபிரானிடம் விபூதியின் மேன்மையை அறிந்ததும், விபூதி தயாரிக்கும் முறையையும் அறிந்தது பற்றியும் சில பகுதிகளை காண்க.
புராணம் ஓதுவதற்கு முன்பே சிவபிரானை நினைத்து தியானிக்க வேண்டும் என்று பத்ம புராணம் கூறுகிறது. அதற்கு பின்னர், இராமனே சிவபூஜை, சிவஞானம், விபூதி மகிமை ஆகியவற்றைக் குறித்து கேட்கிறான். இவை அனைத்தும் சைவ பிரமாணத்தின் நேரடி சான்றுகளாக இருக்கின்றன.
புராணங்களை ஓதத் தொடங்கும் முன்பு சிவபிரானை நினைக்க வேண்டும். அப்போதுதான் புராண உண்மை விளங்கும் என முனிவர்கள் இராமனிடம் உரைத்தனர்.
ஸஹாஸவதநம் ஶாந்தம் ஶுக்லாம்பரதரம் ஶிவம் ॥
ஹரிணம் சாபயம் சோர்த்த்வபாஹுயுக்மம் கிரீடினம் ।
வ்யாக்யாமுத்ராம் ச தக்ஷே து வாமஹஸ்தே வரப்ரதம் ॥
நாநாரத்நவிபூஷாட்யம் கிரிஜார்த்தாம்புஜாஸனம் ।
பஹுபிர்முனிமுக்யைஸ்து த்யாயமாந பதாம்புஜம் ॥
மூர்திமத்பிஸ்ததா வேதைஃ ஸ்தூயமாநம் புராணகைஃ ।
அந்யைஃ ஸமஸ்தலோகைஶ்ச ஸம்ஸேவிதபதாம்புஜம் ॥
பசுவின் பால்போல் வெண்மையான திருமேனி உடையவர்; மூன்று கண்கள் உடையவர்; விருஷபத்தை வாகனமாகக் கொண்டவர்; மெல்லிய புன்னகை நிறைந்த முகத்துடன் ஶாந்தமாக இருப்பவர்; வெண்மையான ஆடை தரித்த சிவபெருமானைத் தியானிக்க வேண்டும்.
மானையும் அபயமுத்திரையையும் தாங்கியவர்; உயர்த்திய கரங்களுடன் விளங்குபவர்; கிரீடம் அணிந்தவர்; வலக்கையில் வியாக்யான முத்திரையையும், இடக்கையில் வரத முத்திரையையும் உடையவர். பலவகை மாணிக்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்; கிரிஜையுடன் அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தில் விளங்குபவர்; முனிவர்களால் தியானிக்கப்படும் தாமரைத் திருவடிகளை உடையவர். உருவெடுத்த வேதங்களாலும் புராணங்களாலும் புகழப்பட்டவர்; அனைத்து உலகினராலும் பணியப்படும் திருவடிகளை உடைய சிவபெருமானை முதலில் தியானிக்க வேண்டும்.
க்வ பூஜா தேவதேவஸ்ய ஶங்கரஸ்யாமிதௌஜஸஃ ।
ஸ்மரணாத்பாபநாஶஸ்ய ஸ்மரணாந்மோக்ஷதஸ்ய ச ॥
ஶிவஸ்ய ஶிவரூபஸ்ய ஶிவதத்த்வார்த்தவேதினஃ ।
ஸோமஸ்ய ஸோமபூஷஸ்ய ஸோமநேத்ரஸ்ய ராஜிதுஃ ॥
வேதமூர்தேரமூர்தேஶ்ச வேதஸாரஸ்ய வேதினஃ ।
வேதவேதாங்கவித்தஸ்ய வேத்யாவேத்யஸ்ய யோகினஃ ॥
கோக்ஷீரஸமதேஹஸ்ய கோக்ஷீரஸ்நாநமோதினஃ ।
கோபாலினஸ்த்ரிநேத்ரஸ்ய த்ரயீநேத்ரஸ்ய மாயினஃ ॥
ப்ரஶ்நமத்யே ததா ராமம் ஶிவஜ்ஞாநமதாதிஶத் ।
ஸ்தாணுபூத இவாஸீனோ நாஸாக்ரந்யஸ்தலோசனஃ ॥
ஆநந்தநிஷ்யந்தவிலோசநாஶ்ரு ப்ரவாஹஸம்ஸ்ப்ருஷ்டகபோலதேஶஃ ।
ததார தேவம் கிரிஶம் ஹ்ருதம்புஜே கோக்ஷீரஸுஸ்நிக்தஸுசாருகாத்ரம் ॥
ப்ரதிபிம்பமதோ காத்ரே ராமஸ்ய ஸமத்ருஷ்யத ।
த்ருஷ்ட்வைவ பிம்பிதம் ஶம்பும் சதுர்பாஹும் த்ரிலோசனம் ॥
ஸ்ரீராமன் கேட்டான்: “அளவற்ற தேஜஸ் உடைய தேவாதிதேவனான ஶங்கரனை எங்கு எப்படிப் பூஜிக்க வேண்டும்? அவரை நினைத்தாலே பாபம் நாசமாகும்; நினைத்தாலே மோக்ஷம் கிடைக்கும். அவர் ஶிவன், ஶிவரூபன், ஶிவதத்துவத்தின் பொருளை அறிந்தவர், சந்திரனை உடையவர், சந்திரனை அணியாகக் கொண்டவர், சந்திரன் கண் போல விளங்குபவர்.”
“அவர் வேதத்தின் மூர்த்தியும், அமூர்த்தியும், வேதசாரத்தை அறிந்தவரும், வேத வேதாங்கங்களை அறிந்தவரும், அறியத்தக்கவரும், அறிய முடியாதவரும், யோகியும் ஆவார். பசும்பால்போல் திருமேனி உடையவர், பசும்பாலால் அபிஷேகம் செய்வதில் மகிழ்பவர், கோபாலர், மூன்று கண்கள் உடையவர், மூன்று வேதங்களே கண்களாக விளங்குபவர், மாயையை நடத்துபவர்.”
இவ்வாறு கேள்வியின் நடுவில் ராமனுக்கு ஶிவஜ்ஞானம் போதிக்கப்பட்டது. அசையாத ஸ்தாணுபோல் அமர்ந்து, கண்களை நாசிகையின் நுனியில் நிலைநிறுத்தி, ஆனந்தக் கண்ணீரால் கன்னங்கள் நனைந்த நிலையில், பசும்பால்போல் மென்மையும் அழகும் உடைய கிரிஶனை இதயத் தாமரையில் தியானித்தார். பின்னர் ராமனின் உடலில் நான்கு கரங்களும் மூன்று கண்களும் உடைய ஶம்புவின் பிரதிபிம்பம் தென்பட்டது.
பஸ்ம தாரணம் எவ்விடங்களில் செய்யப்படும் என்று கூறும் ஸ்லோகம்.
பாணேன ச த்ருதம் மூர்த்நி தக்ஷிணோரஸி வா புநஃ ॥
நெற்றியில் தரித்தல் சிறந்தது; லக்ஷ்மி தரித்தது போல அது மங்களகரமானது. பாணன் தலையில் தரித்தான்; அல்லது வலப்பக்க மார்பிலும் தரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பஸ்ம மாஹாத்மியத்தை இராமனுக்கு சிவபிரான் போதித்ததை கூறும் ஸ்லோகங்கள்.
சித்ரகுப்தேன லிகிதா லலாடே யா லிபிர்த்ருடா ।
தயா து லிப்யா நியதம் நரகம் கதமன்யதா ॥
கரோதி பூஜனம் ஶம்போஃ பாபம் நாஶயதே கதம் ।
ஶம்புருவாச ।
பாபம் நாஶயதே க்ருத்ஸ்நமபி ஜன்மஶதார்ஜிதம் ॥
பர்த்ஸனாத்ஸர்வபாபாநாம் ஸ்மரணாச்ச மஹேஶிதுஃ ।
பஸ்மேதி பதமாக்யாதம் தஸ்ய தாரணமுத்தமம் ॥
யதாவிதி லலாடே வை வஹ்நிவீர்யப்ரதாரணாத் ।
நாஶயெல்லிகிதாம் யாமீம் படஸ்தாமிவ ஹவ்யபுக் ॥
ஸ்ரீராமன் கேட்டான்: “சித்ரகுப்தனால் நெற்றியில் உறுதியாக எழுதப்பட்ட எழுத்தின் காரணமாக நரகம் நிச்சயிக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு வேறாகும்? ஶம்புவின் பூஜை அதை எப்படிச் செய்கிறது? பாபத்தை அது எப்படிநாசமாக்குகிறது?”
ஶம்பு கூறினார்: “நூறு பிறவிகளில் சேர்க்கப்பட்ட பாபமாயினும் பஸ்மம் முழுமையாக நாசமாக்குகிறது. எல்லாப் பாவங்களையும் துரத்துவதாலும், மஹேஶ்வரனை நினைவூட்டுவதாலும் அதற்கு ‘பஸ்மம்’ என்று பெயர் கூறப்பட்டது. அதனை தரித்தல் மிகச் சிறந்தது. முறையாக நெற்றியில் அக்னியின் வீரியமுடைய பஸ்மத்தை தரித்தால், யமன் எழுதிய எழுத்தையும், துணியில் உள்ளதை அக்னி எரிப்பது போல, அது அழித்து விடும்.”
மகாவிஷ்ணு பிரளயத்திற்கு பின் பாற்கடலில் இருந்தபோது, சிவபிரான் நேரில் தோன்றி பஸ்மம் தந்து சிவஞானம் அளித்தார். அதற்கு முன் விஷ்ணு செய்த ஸ்துதி இங்கே வருகிறது.
விஷ்ணுஸ்துஷ்டாவ சாத்ருஷ்ட்வா தர்ஶநாய ச தஸ்ய வை ॥
விஷ்ணுருவாச ।
நமஸ்தே தேவதேவேஶ நமஸ்தே ஶாஶ்வதாவ்யய ।
ந ஜானேʼஹம் பவந்தம் போஸ்த்வம் ச வேத்ஸி நமோநமஃ ॥
ஜாநாமி ந ச தே பாவம் துர்நிரீக்ஷ்யா ச தே த்யுதிஃ ।
மாணிக்யகுண்டலம் ஹேமதாமஜாலவிபூஷிதம் ॥
ரத்நாங்குலீயம் ஸுபகம் பாஹுகோஷ்டவிபூஷணம் ।
தனுரக்தோத்தமாகீர்ண தீப்தாயதவிலோசனம் ॥
பாணலோசனஸங்காஶம் பாளலோசனமவ்யயம் ।
கந்தர்பகார்முகப்ராந்திஜநக ப்ருவமீஶ்வரம் ॥
ஸ்நிக்தாதோந்நதசார்வங்க நாஸமச்சகபோலகம் ।
மந்தஸ்மிதம் ப்ரஸந்நாஸ்யம் விபும் பாலேந்துதர்ஶனம் ॥
விஜ்ஞாநரக்தவஸனம் வேதகல்பிதபூஷணம் ।
ஶரணம் த்வாம் ப்ரபந்நோʼஸ்மி சக்ஷுர்மே தீயதாம் விபோ ॥
தீநாந்தக்ருபணாஜ்ஞாநநஷ்டஸ்ய ஶரணம் பவ ।
அத திவ்யம் ததௌ சக்ஷுஃ ஸ்வாத்மதர்ஶநஶக்திமத் ॥
எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட, அவ்வாறு விளங்கிய அந்த அழிவில்லாதவரை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் விஷ்ணு ஸ்துதி செய்தான்.
விஷ்ணு கூறினான்: “தேவர்களின் தேவேசரே! நித்யரும் அழிவில்லாதவருமானவரே! உமக்கு வணக்கம். நான் உம்மை அறியவில்லை; ஆனால் நீர் அனைத்தையும் அறிந்தவர். மீண்டும் மீண்டும் வணக்கம். உமது உண்மை நிலையை நான் அறியவில்லை; உமது ஒளி நேராகப் பார்க்க அரிதானது. மாணிக்கக் காதணிகளாலும் பொன்னாலான மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவர் நீர்.”
“ரத்தின மோதிரங்களும் கரங்களில் அழகிய ஆபரணங்களும் உடையவர்; சிவந்த இதழ்களும் நீண்ட ஒளிமிக்க கண்களும் உடையவர். அம்பைப் போன்ற கூர்மையான கண்களும், நெற்றிக்கண்ணும் உடைய அழிவில்லாத ஈஶ்வரர். மன்மதனின் வில்லையே நினைவூட்டும் அழகிய புருவங்களைக் கொண்டவர். மென்மையான, உயர்ந்த, அழகிய அங்கங்களும், அழகிய மூக்கும், தெளிவான கன்னங்களும் உடையவர். மெல்லிய புன்னகையுடன் பிரசன்ன முகமாக விளங்கும் விபு; இளம் சந்திரனைப் போன்ற தரிசனம் உடையவர்.”
“ஞானச் சிவந்த ஆடை அணிந்தவர்; வேதங்கள் அமைத்த ஆபரணங்களைத் தரித்தவர். விபோ! நான் உம்மை சரணடைந்தேன்; எனக்கு திருவருள் கண் கொடுக்க வேண்டும். ஏழை, குருடன், அறிவழிந்தவன் ஆகிய எனக்கு சரணமாக இருங்கள்.” பின்னர் அவர் தன் ஆத்ம தரிசன சக்தியுடன் கூடிய தெய்வீகக் கண் ஞானத்தை அளித்தார்.
பக்ஷயிஷ்யே ஶுபம் பஸ்ம ஸ்நாதோʼஹம் பஸ்மநா புரா ।
த்ருஷ்ட்வேஶ்வரம் பக்திகம்யம் பஸ்மாபக்ஷயதாச்யுதஃ ॥
ஹரி கூறினான்: “இந்த மங்களகரமான பஸ்மத்தை நான் புசிப்பேன்; முன்னர் நான் பஸ்மத்தால் ஸ்நானம் செய்துள்ளேன்.” பக்தியால் அடையத்தக்க ஈஶ்வரனைத் தரிசித்த பின்பு, அச்ச்யுதனான விஷ்ணு பஸ்மத்தைப் புசித்தார்.
முடிவுரை
இத்யாதி பரமப்பிரமாணங்களால் விஷ்ணுவும், அவர் அவதாரமான இராமனும், திருநீறணிந்து அதனைப் புசிக்கவும் செய்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதனை அறியாத பஞ்சராத்திரிகள் பெருமாளுக்கு அவைதீகமான ஊர்த்துவ புண்டரத்தை தடவி, ஸ்மிருதிகளில் விபூதி நிந்தை இருப்பதாக பூச்சாண்டி காட்டுவது வேடிக்கையான சாஸ்திர விரோதம். அதர்வசிரஸ், பிருஹத்ஜாபாலம் முதலான உபநிடதங்கள் விபூதியின் பெருமையை எடுத்துரைக்கும் போது, அதற்கு எதிராக காட்டப்படும் வளைந்த ஸ்மிருதி வாதங்களுக்கு சைவ சாஸ்திரத்தில் மதிப்பில்லை.
ராமன் சிவபூஜையை அறிந்தான், விஷ்ணு பஸ்மத்தைப் புசித்தான், சிவபெருமான் ஞானக் கண் கொடுத்தான் என்று பத்ம புராணம் நேரடியாகச் சொன்ன பின், பஞ்சராத்திர வாதத்தின் மறைப்பும் மருட்சியும் சிதறி விழும்.
மூல நூல் சரிபார்ப்பு இணைப்புகள்
- பத்ம புராணம், பாதாள காண்டம், 104வது அத்தியாயம்: WisdomLib — Padma Purāṇa 5.104
- பத்ம புராணம், பாதாள காண்டம், 105வது அத்தியாயம்: WisdomLib — Padma Purāṇa 5.105
- பத்ம புராணம், 5.105.132: WisdomLib — Verse 5.105.132
- பத்ம புராணம், 5.105.192: WisdomLib — Verse 5.105.192
- பத்ம புராணம், 5.105.223: WisdomLib — Verse 5.105.223
Comments
Post a Comment