Sunday, 30 November 2025

இராமேஸ்வர பரத்துவம் -1

இராமேஸ்வரம் - இராமனின் ஈஸ்வரனாகிய சிவபிரான் இருந்தருளும் தலம் 

திருச்சிற்றம்பலம்

      ஸ்ரீ ஞானசம்பந்த குருப்யோ நமஹ! 

" தசரத தநய ஸ்தாபிராதி தத்வாத் "
                                       - சுலோக பஞ்சகம்




     இராமபிரான் சீதையை இழந்து தெற்கு பகுதி நோக்கி வருகையில் அவர் இராவண வதம் செய்து அதன் பின் பிரமகத்தி தோஷம் நீங்கவேண்டி சேதுக்கரையில் சிவலிங்கம் ஸ்தாபித்து 16 சோடசோபசாரங்களை செய்து வழிபட்ட உண்மையை புராணங்கள் வெளிப்படையாகவும் வால்மீகி ராமாயணம் மறைமுகமாகவும் கூறும். சில புராணங்கள் அவர் போர் செய்வதற்கு முன்பே சிவபூசை செய்ததாக கூறும். இப்படி கூறுவது முரணாகாதோ எனின் ஆகாது. இராம அவதாரம் பல முறை நிகழ்ந்ததாகலின் அவை விரோதிக்க மாட்டா.  

இராமேஸ்வரம் பற்றிய புராணப் பிரமாணங்கள் பின்வருமாறு

1. பிரம்ம மஹா புராணம் 
   
"ராமேஶ்வர இதி க்யாதஃ ஸர்வகாமபலப்ரதஃ । யே தம் பஶ்யந்தி காமாரிம் ஸ்நாத்வா ஸம்யங் மஹோததௌ ॥  
கந்தைஃ புஷ்பைஸ்ததா தூபைர் தீபைர் நைவேத்யகைர் வரைஃ ।
ப்ரணிபாதைஸ்ததா ஸ்தோத்திரைர் கீதੈர்வாத்யைர் மனோஹரைஃ
ராஜஸூயபலஂ ஸம்யக் வாஜிமேதபலஂ ததா । ப்ராப்நுவந்தி மகாத்மானஃ ஸம்ஸித்திம் பரமாம் ததா
காமகேன விமானேன கிங்கிணீஜாலமாலிநா । உபகீயமாநா கந்தர்வைஃ சிவலோகம் விரஜந்தி தே"

                                                                                    - 28 ஆவது அத்தியாயம், ஸ்லோகங்கள் (56 -60) 


 பொருள் :  

அங்கிருக்கும் அந்த மகாதேவன் “ராமேஶ்வரன்” என்ற பெயரில் புகழ் பெற்றவர்; எல்லா ஆசைகளின் பலனையும் அளிப்பவர். அங்கே விசுவிதியான முறையில்,பெரும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து,
காமனை அழித்த இந்த பகவானான ராமேஶ்வரனைபக்தியுடன் தரிசிப்பவர்கள்
அவர்கள் விரும்பும் எல்லா கர்த்தியங்களின் பலனையும் பெறுகிறார்கள்.புகை (தூபம்), விளக்குகள்,
அற்புதமான நைவேத்யங்கள், யோக்யமான மணங்கள், மலர்கள்,சாஷ்டாங்க நமஸ்காரம்,ஸ்தோத்திரங்கள்,இனிமையான பாடல்கள், வாசிப்புக்கள் ஆகியவைகளால்
அந்த ராமேஶ்வரனை ஆராதிப்பவர்கள் ஒரு ராஜசூய யாகம் செய்த பலனைப் போலவும்,
வாஜிமேத யாகம் செய்த பலனைப் போலவும் மிகுந்த புண்ணிய பலனைப் பெறுகிறார்கள்;
மேலும் உயர்ந்த சித்தியையும் அடைவார்கள். அந்த பக்தர்கள்
இச்சைக்கு ஏற்றபடி  சென்று வரக்கூடிய கிங்கிணி மணி ஜாலங்கள் அலங்கரித்த விமானங்களில்,
கந்தர்வர்களின் கீதங்கள் ஒலிக்க சிவலோகத்தை அடைகிறார்கள். 


2. நாரதபுராணம் உத்தரார்த்தம்

"யம் த்ருஷ்ட்வா மனுஜோ தேவி முச்யதே பவஸாகராத் । சேதோஃ ஸந்தர்ஶனம் புண்யம் யத்ர ராமேஶ்வரோ விபுஃ
தர்ஶனாதேவ மர்த்யாநாமமரத்வம் பிரதச்சதி । ராமேஶ்வரம் து ஸம்பூஜ்ய நரோ நியதமாநஸஃ ॥"
                                                                                                             - அதிகாரம் 76, சுலோகம் 3 , 4

பொருள் :

      தேவியே!  யாராவது அந்த ஸேதுவைக் கண்ணால் தரிசிக்கிறார்களோ,
அவர்கள் பவசாகரத்திலிருந்து விடுதலை பெறுகிறார்கள்.
ஏனென்றால், அந்தப் புனிதமான ஸேதுவில்
விபுவான ராமேஶ்வரர் (ராமேஸ்வரம் உள்ள சிவலிங்கம்) இருக்கிறார்.அந்த ஸேதுவை
ஒரு சாதாரண மனிதன் தரிசனமே செய்தால்கூட அவனுக்கு அமரத்துவம், அபரிமிதமான புண்யம் கிடைக்கும்.(குறிப்பாக, மனத்தைத் தணித்து நியமங்களோடு
ராமேஶ்வரத்தை பக்தியுடன் பூஜை செய்கிற மனிதன்). 

"தம் சமப்யர்ச்ய விதிவத்கத்வா ஸேதும் சமர்ச்ய ச । ராமேஶ்வரம் மகேந்த்ராத்ரிம் பார்கவம் ஸமவந்தத ॥"

      – அதிகாரம் 82, சுலோகம் 10

பொருள் :

       ஒரு பெண் அந்தக் க்ஷேத்திரத்தில் (முந்தைய ஸ்லோகங்களில் சொன்ன புருஷோத்தமம் முதலியவை) இருப்பவரை விதிப்படிக் கும்பிட்டு ஆராதனை செய்து, அங்கிருந்து முன்னால் ஸேதுவுக்குச் சென்று அதையும் முறையாகப் பூஜித்து, பிறகு ராமேஶ்வரம், மஹேந்திராதிரிபர்வதம்,
பார்ஹவக் க்ஷேத்திரம் இவைகளை எல்லாம் மரியாதையோடு வணங்கி வந்தாள். 



3. கூர்ம மஹா புராணம்

  " கத்வா ராமேஸ்வரம் புண்யம் ஸ்நாத்வா சைவ மகோததௌ । ப்ரஹ்மசர்யாதிபிர்யுக்தோ த்ருஷ்ட்வா ருத்ரம் விமுச்யதே ॥ "
                          - அத்தியாயம் 30, ஸ்லோகம் 23

பொருள் :  

     பாவநிவரணத்திற்கான பிராயச்சித்தமாக,
புனிதமான ராமேஸ்வரம் எனும் ஊருக்குச் சென்று, அங்கும்
பெரிய சமுத்திரத்திலும் ஸ்நானம் செய்து,
பிரம்மச்சரியம் முதலான நல்லாசாரங்களில் நிலைத்து,
அங்கு இருக்கும் உருத்திரனை பக்தியுடன் தரிசனம் செய்கிற
அந்தத் த்விஜன் தன் பிரம்மஹத்யை போன்ற மிகப் பெரிய பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். 

 
4. மத்ஸ்ய மஹா புராணம் - பித்ரு ஸ்ரார்த்த தீர்த்தங்கள்


ஶ்ரீபர்ணீ தாம்ரபர்ணீ ச ஜயாதீர்த்தமனுத்தமம் ।
ததா மத்ஸ்யநதீ புண்யா ஶிவதாரம் ததேவ ச ॥
பத்ரதீர்த்தஶ்ச விக்யாதம் பம்பாதீர்த்தஶ்ச ஶாஶ்வதம் ।
புண்யம் ராமேஶ்வரம் தத்வத் ஏலாபுரமலம் புரம் ॥

        - முதல் காண்டம், 22 அத்தியாயம், ஸ்லோகம் 49,50

பொருள்

ஸ்ரீபர்ணி நதி, தாம்ரபர்ணி நதி, மிகச் சிறந்த ஜயாதீர்த்தம்,
புண்ணியமான மத்ஸ்ய நதி, அதேபோல் ஶிவதாரத் தீர்த்தமும்  புகழ்பெற்ற பத்ர தீர்த்தமும், நித்தியமான பம்பா தீர்த்தமும் உள்ளன.
அதுபோல் மிகப் புண்ணியமான ராமேஶ்வரத் தீர்த்தமும்,
அதேபோல் மிகத் தூயமான ஏலாபுரம் என்னும் புண்யநகரமும் உள்ளது.  இவை யாவும் பித்ருக்கள் விரும்பும் புண்யத்தீர்த்தங்களாகக் கூறப்படுகின்றன.


இத்யாதி மகாபுராண உபபுராண பிரமாணங்களால் இராமபிரான் சிவபூசை செய்த உண்மை வெளிப்பட்டது. பஞ்சராத்திரிகள் எவ்வளவு தான் முயன்றாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது.  இனியும் பல புராண பிரமாணங்கள் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் காணலாம். 


 Please check the following video link those who are want to hear Lord shiva supremacy fully. 


  
    உமாபதயே பசுபதயே நமோ நமஹ
                   
திருச்சிற்றம்பலம்!! 





1 comment:

  1. அருமை. இதுபோல் வைணவரில் ஒருவரும் புராண பிராமணங்களோடு வெளியிடமாட்டர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரஜஸ் தமஸ் என்று தனக்கு ஒத்துவராததை ஒதுக்கி விஷ்ணுதான் பரம் என்று தனக்கு தானே பொய் கூறிக்கொண்டு உலகை ஏமாற்றும் கயவர்கள்.
    இன்னும் பல கட்டுரைகள் எழுதி அவர்கள் பொய்யை அம்பலப்படுத்த வேண்டுகிறேன். ஆர்யத்தமிழன் என்னும் வைணவனுக்கு இருக்கிறது ஆப்பு

    ReplyDelete

சிவபரத்துவம் - சிவ சர்வோத்தமம்

    பரம காரணனாகிய சங்கரனே பரம்பொருள் என்றும் அவரே விஷ்ணு முதல் அனைத்து தேவர்களுக்கும் தலைவர் என்பதையும் வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இவைகளை ...